எம்.ஜி. இஸட்.எஸ். இ.வி.

எம்.ஜி. இஸட்.எஸ். இ.வி.
Published on

எம்.ஜி. மோட்டார் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் புதிய மாடலை இஸட்.எஸ். இ.வி. என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. ஏ.டி.ஏ.எஸ். சிறப்பம்சம் கொண்ட இந்த மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.27.90 லட்சம். எக்ஸ்ளூசிவ் புரோ மாடலின் விலை சுமார் ரூ.28.49 லட்சம்.

ஏ.டி.ஏ.எஸ். மாடலில் வாகன நெரிசல் உள்ள பகுதி பற்றிய அறிவுறுத்தல், முன்புற மோதல் தவிர்ப்பு எச்சரிக்கை, தானியங்கி பிரேக்கிங் வசதி, லேன் கீப்பிங் அசிஸ்ட், அதிவேக எச்சரிக்கை மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல், ஏ.பி.எஸ்., இ.பி.டி. ஸ்டெபிளிடி கன்ட்ரோல் 360 டிகிரி சுழலும் கேமரா, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், மேற்கூரை, 10.1 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜிங், 7 அங்குல டிரைவர் உதவி திரை ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான பயணத்திற்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன.

இந்தக் காரில் 50.3 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 461 கி.மீ. தூரமும், நகர சாலைகளில் 339 கி.மீ. தூரம் வரையும் ஓடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கார் ஸ்டார்ட் செய்த 8.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும் திறன் கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com