விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை

கடலூர் முதுநகரில் விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை
Published on

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் சதீஷ் (வயது 35). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சதீசை பிரிந்து அவருடைய மனைவி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ் தனது மாட்டுக்கொட்டகையில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்தார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அங்கு சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com