புதிய இயக்குனர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு

பாகூர் பால் ற்பத்தியாளர்கள் சங்கபுதிய இயக்குனர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதிய இயக்குனர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு
Published on

பாகூர்

பாகூர் அடுத்த பரிக்கல்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க.விக்ரமன் அணி சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் 9 பேர் ஒரு குழுவாகவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு குழுவாகவும் போட்டியிட்டனர். இதில் தங்க. விக்ரமன் சார்பில் போட்டியிட்ட கோவிந்தன், சந்திரசேகரன், சுப்ரமணி, தண்டபாணி, அபிமன்னன், தேவநாதன், புஷ்பா, ராதா, பத்மா ஆகிய 9 பேர் வெற்றி பெற்று இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க புதிய இயக்குனர்கள் தங்க.விக்ரமன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள், சங்க இயக்குனர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com