விளையாட்டு துப்பாக்கியால், பலூனை சுட்டு மகிழ்ந்த அமைச்சர் நமச்சிவாயம்!

காரைக்கால் கடற்கரை பகுதியில், விளையாட்டு துப்பாக்கியால் பலூனை சுட்டு அமைச்சர் நமச்சிவாயம் மகிழ்ச்சியடைந்தார்.
விளையாட்டு துப்பாக்கியால், பலூனை சுட்டு மகிழ்ந்த அமைச்சர் நமச்சிவாயம்!
Published on

காரைக்கால்

காரைக்கால் கடற்கரை பகுதியில், விளையாட்டு துப்பாக்கியால் பலூனை சுட்டு அமைச்சர் நமச்சிவாயம் மகிழ்ச்சியடைந்தார்.

காரைக்கால் வருகை

காரைக்காலில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, புதுச்சேரி உள்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயம் காரைக்காலுக்கு சென்றிருந்தார்.

பின்னர் அவர் காரைக்கால் சுற்றுலா கடற்கரை பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டார். பின்னர் அங்கு கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுடன் தானும் இணைந்து சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.

பலூனை சுட்டு மகிழ்ச்சி

தொடர்ந்து கடற்கரையை சுற்றிப்பார்த்தார். அப்போது, அங்கு சிறுவர்-சிறுமிகள் விளையாட்டு துப்பாக்கியால் பால்ரஸ் குண்டுகள் மூலம் பலூனை சுட்டவாறு மகிழ்ச்சியாக இருந்தனர்.

அதைப்பார்த்த அமைச்சர், சிறுவயதில் தானும் அதுபோல பலூன்களை விளையாட்டு துப்பாக்கியால் சுட்டதை நினைவு கூர்ந்தார். அதன் பின்னர், அக்கடைக்காரரிடம் விளையாட்டு துப்பாக்கி மூலம் பலூன்களை குறிபார்த்து சுட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மாநிலத்தின் உள்துறை அமைச்சரான நமச்சிவாயம், எவ்வித ஆடம்பரமும் இன்றி, சுற்றுலா பயணிகள் யாருக்கும் தொந்தரவு அளிக்காமல் எளிமையாக நடந்து கொண்டது பார்ப்பவர்களை வியப்படைய செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com