ஒப்பந்ததாரரிடம் எம்.எல்.ஏ.க்கள் 40 சதவீத கமிஷன் பெறுகின்றனர்-சுமலதா எம்.பி குற்றச்சாட்டு

வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒப்பந்ததாரரிடம் எம்.எல்.ஏக்கள் 40 சதவீதம் கமிஷன் பெறுகின்றனர் என்று சுமலதா எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒப்பந்ததாரரிடம் எம்.எல்.ஏ.க்கள் 40 சதவீத கமிஷன் பெறுகின்றனர்-சுமலதா எம்.பி குற்றச்சாட்டு
Published on

மண்டியா:

மண்டியாவின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து சுமலதா எம்.பி நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒப்பந்த உரிமம் பெறவேண்டும் என்றால் மண்டியாவில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு கமிஷன் வழங்க வேண்டியுள்ளது. இதை பல முறை வெளிப்படையாக கூறியுள்ளேன். இதுதொடர்பாக மாநில அரசிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சனையையும் மூடி மறைக்க முடியாது. தரமற்ற பணிகள் நடப்பதற்கு இந்த கமிஷன் முறைகேடும் ஒரு காரணம்.

எந்த ஒப்பந்ததாரராக இருந்தாலும், பணிகள் முடிந்த உடனே கமிஷன் தொகையை வழங்கவேண்டும். இல்லையென்றால் எம்.எல்.ஏக்கள் வளர்ச்சி திட்டப்பணிக்கான பணத்தை விடுவிக்க மறுத்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com