ஹிடாச்சியின் புதிய ஏர்கண்டிஷனர்


ஹிடாச்சியின் புதிய ஏர்கண்டிஷனர்
x
தினத்தந்தி 8 Jun 2023 8:34 PM IST (Updated: 8 Jun 2023 8:50 PM IST)
t-max-icont-min-icon

வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹிடாச்சி நிறுவனம் கோடை வெயிலின் கொடுமையை சமாளிக்கும் வகையில் புதிய மேம்பட்ட ஏர்கண்டிஷனர்களை அறிமுகம் செய்துள்ளது.

`யோஷி', `ஐ-ஸென்', `சென்பாய்' என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. யோஷி வகை ஏர் கண்டிஷனர்கள் 5 நட்சத்திரக் குறியீடு அந்தஸ்து பெற்றவை. மற்ற இரண்டு மாடல்களும் 3 நட்சத்திரக் குறியீடு பெற்றவை. ஏர் ஹோம் சீரிஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அழகிய வடிவமைப்பைக் கொண்டிருப் பதால் அறைக்கு இது மேலும் அழகு சேர்ப்பதாக இருக்கும். இதில் பிராஸ்ட் வாஷ் தொழில்நுட்பம் உள்ளதால் ஏர் கண்டிஷனர்களின் உள்பகுதியில் ஐஸ் உறைவது தவிர்க்கப்படும். இதனால் தூசி படிவது குறையும். பாக்டீரியா அறையில் உருவாவது தடுக்கப்படும். இதிலிருந்து குளிர்ந்த காற்று 24 மீட்டர் தூரத்துக்கு வீசும் திறன் கொண்டது. இதில் நான்கு பகுதியிலிருந்து காற்று வெளியாகும் வசதி உள்ளதால் அறையில் அனைத்துப் பகுதியிலும் விரைவில் குளிர்ச்சி பரவிவிடும்.

யோஷி மாடலில் 1.5 டன் திறன் கொண்ட 5 நட்சத்திர மாடலின் விலை சுமார் ரூ.44,119 முதல் ஆரம்பமாகிறது. ஐ-ஸென் மாடலில் 1.5 டன் விலை சுமார் ரூ.32,290 முதல் ஆரம்பமாகிறது. சென்பாய் மாடலில் 1.5 டன் விலை சுமார் ரூ.38,450 முதல் ஆரம்பமாகிறது.


Next Story