ஐடெல் பி 55 ஸ்மார்ட்போன்

ஐடெல் நிறுவனம் ஐடெல் பி 55 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஐடெல் பி 55 ஸ்மார்ட்போன்
Published on

 இது 6.6 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரை, ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸரைக் கொண்டது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, பக்க வாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.9,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com