ஐடெல் எஸ் 23 பிளஸ்

ஐடெல் நிறுவனம் புதிதாக எஸ் 23 பிளஸ் என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஐடெல் எஸ் 23 பிளஸ்
Published on

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபல மாகத் திகழும் ஐடெல் நிறுவனம் புதிதாக எஸ் 23 பிளஸ் என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.15 ஆயிரம். இது 6.78 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டுள்ளது.

இதில் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா கொண்ட இதில் திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் கொண்ட இது குரல் வழிக் கட்டுப்பாட்டிலும் செயல்படும். நீடித்து செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com