மோட்டோரோலா ரேஸர் 40 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா ரேஸர் 40 ஸ்மார்ட்போன்
Published on

மோட்டோரோலா நிறுவனம் ரேஸர் 40 மற்றும் ரேஸர் 40 அல்ட்ரா என்ற பெயர்களில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 6.9 அங்குல முழுமையான மடக்கும் வகையிலான ஹெச்.டி. திரையைக் கொண்ட இதில் வெளிப்புறம் 1.4 அங்குல திரை உள்ளது. ஸ்நாப்டிராகன் 7-வது தலைமுறை பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளமும், இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் உள்ளது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும், பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சாரும் உள்ளது. 4,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரேஸர் 40 மாடல் விலை சுமார் ரூ.59,999.

ரேஸர் 40 அல்ட்ரா மாடல் விலை சுமார் ரூ.89,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com