நோக்கியா ஜி 42 ஸ்மார்ட்போன்


நோக்கியா ஜி 42 ஸ்மார்ட்போன்
x

நோக்கியா போன்களைத் தயாரிக்கும் ஹெ.எம்.டி. குளோபல் நிறுவனம் 5-ஜி அலைக் கற்றையில் செயல்படும் ஜி 42 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. லாவண்டர், இளம் சிவப்பு, கிரே ஆகிய வண்ணங்களில் வந்துள்ளது. ஐபிக்ஸிட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த ஸ்மார்ட்போனை ஹெச்.எம்.டி. குளோபல் உருவாக்கியுள்ளது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் இதன் பின்புற கவர் பகுதி 65 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் அமலுக்கு வரும்போது அதைப் பயன் படுத்திக்கொள்ளும் வசதியும், இரண்டு ஆண்டுகளுக்கு மேம்படுத்தப் படும் செயலிகளை இலவசமாக பெறும் வசதியும் அளிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீண்ட நேரம் செயல்பட 5000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி யுடன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ள இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். பின்புறம் 50 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட 3 கேமராக்கள் உள்ளன. 6.5 அங்குல உறுதியான கொரில்லா கண்ணாடி திரை, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் கொண்டது.

இதன் விலை சுமார் ரூ.20,990.


Next Story