ஓப்போ ஏ 58 ஸ்மார்ட்போன் அறிமுகம்


ஓப்போ ஏ 58 ஸ்மார்ட்போன் அறிமுகம்
x

ஓப்போ நிறுவனம் ஏ 58 ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.72 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரை உள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 12 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப் பட்டுள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினை வகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். இதில் இரண்டு சிம்கார்டு போடும் வசதி உள்ளது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, பச்சை வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.14,999.


Next Story