ஓப்போ எப் 23 ஸ்மார்ட்போன்

ஓப்போ எப் 23 ஸ்மார்ட்போன்
Published on

ஓப்போ நிறுவனம் எப் 23 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.72 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. இதில் ஸ்நாப்டிராகன் 695 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம்.

இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண் டது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் ஊக் சார்ஜருடன் வந்துள்ளது.

தங்க நிறம், கருப்பு வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.24,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com