போகோ எப் 5 ஸ்மார்ட்போன்

போகோ எப் 5 ஸ்மார்ட்போன்
Published on

போகோ நிறுவனம் புதிதாக எப் 5 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் ஓலெட் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 7-வது தலைமுறை பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 செயலி உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.

பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி 67 வாட் திறன் கொண்ட சார்ஜருடன் வந்துள்ளது.

கருப்பு, வெள்ளை, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.29,999. இதில் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.33,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com