விவோ டி 2 புரோ 5-ஜி ஸ்மார்ட்போன்


விவோ டி 2 புரோ 5-ஜி ஸ்மார்ட்போன்
x

விவோ நிறுவனம் புதிதாக டி 2 புரோ 5-ஜி என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.78 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. மிகச் சிறப்பான செயல்பாட்டுக்கு ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி 7200 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதியும் உள்ளது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா, செல்பி பிரியர்களுக்காக முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா , திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,600 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 66 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.23,999. 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.24,999.


Next Story