மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
Published on

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

கரிவலம்வந்தநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (12.2.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக அன்று கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com