‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதல் வீடுகள்

பிரதம மந்திரியின் அனைவருக்கு வீடு திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதல் வீடுகள்
Published on

இந்த திட்டத்தின் அனைத்து பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் இதுவரையில் 16 லட்சத்து 4 ஆயிரத்து 342 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 41 லட்சத்து 42 ஆயிரத்து 133 வீடுகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் கூடுதல் வீடுகள்

தமிழக அளவில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 444 வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 4 லட்சத்து 33 ஆயிரத்து 873 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 5 லட்சத்து 50 ஆயிரத்து 695 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி தமிழகத்தில் மேலும், 12 ஆயிரத்து 174 வீடுகள் மேலும் கட்டப்பட உள்ளன.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் 3 லட்சத்து 93 ஆயிரத்து 611 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சராசரியாக ஒரு மாதத்தில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வீடுகள் வரை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த தகவலை அனைவருக்கும் வீடு திட்டத்தின் இயக்குனர் மற்றும் இணைச் செயலாளர் அம்ரித் அபிஜித் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உலகத்தர தொழில் நுட்பத்தில் வீடுகள்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் சென்னை பெரும்பாக்கத்தில் உலக தரத் தொழில்நுட்பத்தில் 1,000 வீடுகள் வரும் ஜூலை மாதம் கட்டப்பட உள்ளன. தலா 400 சதுர அடியில் அமைய உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மத்திய அரசு தலா ரூ.2.5 லட்சம் மானியமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com