தானியங்களின் அன்னை

உலகின் மிக பிரபலமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்று, கீன்வா. இது ‘தானியங்களின் அன்னை’ என்று அழைக்கப்படுகிறது. குளூட்டன் அலர்ஜியை ஏற்படுத்தும் புரதம் இல்லாதது இதன் தனிச்சிறப்பு.
தானியங்களின் அன்னை
Published on

லகின் மிக பிரபலமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்று, கீன்வா. இது தானியங்களின் அன்னை என்று அழைக்கப்படுகிறது. குளூட்டன் அலர்ஜியை ஏற்படுத்தும் புரதம் இல்லாதது இதன் தனிச்சிறப்பு. நமது உடலுக்கு அவசியமாக தேவைப்படும் 9 அமினோ அமிலங்களும் இதில் இருக்கின்றன. அத்துடன் இது, நார்ச்சத்து, மக்னீசியம், பி வைட்டமின்கள், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் இ மற்றும் பல பயனுள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளையும் அதிகமாக கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட பார்ப்பதற்கு நம் நாட்டு கம்பு பயிரை ஒத்துப் போகும் கீன்வா, தென் அமெரிக்க மக்களின் பிரதான உணவாகும். இது, விதை குடும்பத்தைச் சார்ந்தது. க்யூர்செட்டின் மற்றும் கேம்ப்பெரால் என்ற பிளேவனாய்டுகளை மிக அதிக அளவில் கொண்டிருக்கிறது கீன்வா. இந்த பிளேவனாய்டுகள் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் மன தளர்ச்சியை குறைக்கக்கூடிய தன்மைகளை கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

கரையக்கூடிய நார்ச்சத்து இதில் மிக அதிகமாக இருக்கிறது. எனவே, ரத்த சர்க்கரை அளவு, கெட்ட கொழுப்பின் அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்த இது உதவுகிறது. உடல் எடை குறையவும் வழி வகுக்கிறது. கீன்வாவில் கனிமங்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. இவை ரத்த செல்கள், தோல் செல்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காயங்களை விரைவாக குணப்படுத்தவும் உதவுகின்றன.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடு களில் இதை பரவலாக பயிரிடுகிறார்கள்.

கீன்வா விதையில் லேசான கசப்புச்சுவை இருப்பதால், அதை சமைப்பதற்கு முன்னர் குளிர்ந்த நீரில் நன்றாக அலசிவிட வேண்டும். ஒரு கப் விதைக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ வைத்து வேக வைக்கலாம். வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், கொத்தமல்லி இலை சேர்த்து இதை கலவை சாதம்போல் தயாரிக்கலாம். ட்ரை ப்ரூட்ஸ் சேர்த்து காலையில் கஞ்சிபோலவும் சாப்பிடலாம். முளைவிட்ட கீன்வாவை சாலட் மற்றும் ரொட்டி தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com