தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - ராதாபுரம் அருகே பரிதாபம்

தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - ராதாபுரம் அருகே பரிதாபம்

ராதாபுரம் அருகே தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Published on

ராதாபுரம்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன் மகன் சாத்தையா (வயது 24). கட்டிட தொழிலாளி. இவருடைய தாய் அமுதா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் சாத்தையா மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நேற்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் சாத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்டிட தொழிலாளி மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com