தாய், மகனுக்கு கத்திக்குத்து

பாகூரில் சண்டையை சாமாதானம் செய்து வைத்த விவகாரத்தில் தாய், மகனை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகினறனர்.
தாய், மகனுக்கு கத்திக்குத்து
Published on

பாகூர்

பாகூர் தாமரைகுளம் வீதியில் வசித்து வருபவர் காத்தமுத்து. அவரது மனைவி மோகனா (வயது 54). இவர்களது மகன் வினோத்குமார் (30) கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரிக்கரையில் உள்ள சாராயக்கடைக்கு சாராயம் குடிக்க சென்றார். அப்போது பாகூரை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும், கரைமேட்டை சேர்ந்த சுதாகருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை வினோத்குமார் சமாதானம் செய்து வைத்தார். இதனால் வினோத்குமார் மீது ஆத்திரமடைந்த சுதாகர், மோகனாவின் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தினார். இதை தடுக்க முயன்ற வினோத்குமாரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதில் காயமடைந்த தாய், மகன் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com