மோட்டோ ஜி 54 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோ ஜி 54 ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

மோட்டோரோலா நிறுவனம் ஜி 54 என்ற பெயரில் புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டாகோர் கோர்டெக்ஸ் ஏ 55 மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை அதிகரிக்கலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் இதில் உள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப் பட்டுள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீலம், புதினா பச்சை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் இதன் விலை சுமார் ரூ.15,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com