மோட்டோ ஜி 84 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோ ஜி 84 ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஜி 84 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.55 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் போலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 695 8 என்.எம். பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இரண்டு சிம் கார்டுகள் போடும் வசதி உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் ஆகிய வசதிகளும் இதில் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 30 வாட் டர்போ சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.21,499.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com