மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
Published on

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் உள்ள நத்தகாடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்(வயது 34). இவர் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் ஆலத்தூர் கேட் சென்றார். அப்போது எதிரே நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(20) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சத்யராஜின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள், 2 பரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் சத்யராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com