மோட்டார் சைக்கிள் திருட்டு

மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருட்டு
Published on

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள முளங்குழி பகுதியை சேர்ந்தவர் பிரவின். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் முன்பு நிறுத்தி விட்டு பஸ்சில் வேலைக்கு சென்றார். இரவு வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ திருடி சென்றதாக தெரிகிறது.

இது குறித்து பிரவின் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com