மோட்டார் சைக்கிள் திருடன் கைது

புதுச்சேரி பெரியகடை போலீசார் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிள் திருடனை கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடன் கைது
Published on

புதுச்சேரி

புதுச்சேரி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ரெயின்போ நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி ஆவணங்களை கேட்டனர். அவரிடம், உரிய ஆவணங்கள் எதும் இல்லை. மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், புதுவை ரோடியர்பேட் பகுதியை சேர்ந்த அப்துல் காதர் (வயது 20) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அப்துல் காதரை கைது செய்து அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைதான அப்துல்காதர் கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டக்குப்பம் மெயின்ரோட்டில் உள்ள பேன்சி கடை ஒன்றில் புகுந்து ரூ.5 ஆயிரத்தை திருடியதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் அப்துல்காதரை போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com