மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது மற்றும் அவர் திருடி பதுக்கி வைத்திருந்த 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
Published on

புதுச்சேரி

நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். வீட்டில் நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தபோது மோட்டார் சைக்கிளை திருடியது விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்த தீபக்ராஜ் (வயது39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சாமுவேல் மோட்டார் சைக்கிள் மற்றும் மூலக்குளம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் திருடி பதுக்கி வைத்திருந்த 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com