

அறந்தாங்கி,
இவருடைய மனைவி தேவி (33). கணவன்மனைவி இருவரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அறந்தாங்கி இருபாற்று பாலம் அருகே சென்றபோது, இவர்களது மோட்டார் சைக்கிளும், தில்லைவயல் கிராமத்தை சேர்ந்த விஜய் (23) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரியமாணிக்கம், தேவி, விஜய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தேவி மேல்சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.