குடும்ப தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை

மேலூரில் குடும்ப தகராறில் தாழிலாளியை வெட்டிக்கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
குடும்ப தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை
Published on

மேலூர்,

மேலூரில் குடும்ப தகராறில் தாழிலாளியை வெட்டிக்கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

குடும்ப தகராறு

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் பொன்னையன்(வயது 38). இவரது மனைவி அழகம்மாள்(27). விவசாய கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அழகம்மாளை அவரது கணவர் பொன்னையன் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அழகம்மாள் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் பொன்னையனை சராமாரியாக வெட்டினார்.

கைது

இதில் படுகாயமடைந்த பொன்னையனை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக தூக்கி சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் அழகம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் கணவரை, மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com