மும்ராவில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை

மும்ராவில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
மும்ராவில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
Published on

தானே,

தானே மும்ரா கவுசா பகுதியை சேர்ந்தவர் பைசான் மேமான் (வயது32). இவருக்கு கடந்த 24-ந்தேதி நண்பரிடம் இருந்து அழைப்பு வந்தது. இதனால் நண்பரை சந்திக்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் மறுநாள் அவரது மனைவி மும்ரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மும்ரா அருகே மறைவான இடத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு நடத்திய விசாரணையில், அது காணாமல் போன பைசான் மேமான் என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரது செல்போன் மூலம் கொலையாளியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com