விநாயகர் சிலையை திருட முயன்ற மர்மநபர்கள்

பெங்களூருவில், விநாயகர் சிலையை திருட முயன்ற மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விநாயகர் சிலையை திருட முயன்ற மர்மநபர்கள்
Published on

பெங்களூரு:

பெங்களூரு ஆசாத்நகரை சேர்ந்தவர் முனிராஜ். இவர், ஆண்டுதோறும் பூஜம்மா சர்க்கிளில் வைத்து விநாயகர் சிலைகளை விற்று வருகிறார். அதன்படி, கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி வியாபாரம் முடிந்ததும், சர்க்கிளிலேயே சிலைகளை வைத்துவிட்டு முனிராஜ் சென்றிருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஒரு விநாயகர் சிலையை மட்டும் திருடி சென்றனர்.

சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதால், விநாயகர் சிலையை அங்கேயே விட்டு விட்டு மர்மநபர்கள் சென்றிருந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து முனிராஜ் கொடுத்த புகாரின்பேரில் சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்மநபர்களையும் தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com