என். ஊத்துப்பட்டி கன்னிமார் கோவில் திருவிழா: ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து வழிபாடு

பக்தர்கள் பொங்கல் பானைகளுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
என். ஊத்துப்பட்டி கன்னிமார் கோவில் திருவிழா: ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து வழிபாடு
Published on

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள என். ஊத்துப்பட்டியில் உள்ள பட்டாளம்மன், ஜக்கம்மாள், முத்தாலம்மன், பகவதி அம்மன், காளியம்மன், விநாயகர் ஆகிய கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

இவ்விழாவின் முதல் நிகழ்ச்சியாக என். ஊத்துப்பட்டியின் மேற்குப் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கன்னிமார் கோவிலுக்கு பக்தர்கள் பொங்கல் பானைகளுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு சுவாமியின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் நிலக்கோட்டை கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com