

மங்காத்தா, மாநாடு, மன்மதலீலை என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் டைரக்டர் வெங்கட்பிரபு, அடுத்து ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். அதில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.
இது, வெங்கட்பிரபு இயக்கும் 11-வது படம். தெலுங்கில் அவருக்கு முதல் படம். சீனிவாச சித்துரி தயாரிக்கிறார்.