நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்

புதுவை நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
Published on

புதுச்சேரி

புதுவை நயினார் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின்  40-ம் ஆண்டு செடல் உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவில் சிறப்பு அலங்காரத்தில் நாகமுத்து மாரியம்மன், முத்து மாரியம்மன் வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் வருகிற 17-ந்தேதி காலை 108 பால்குடம் ஊர்வலமும், இரவில் முத்து பல்லக்கில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது. 19-ந்தேதி முளைப்பாரி ஊர்வலமும், 21-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவமும், தேரோட்டமும் நடைபெறுகிறது. 4-ந்தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com