ராஜீவ்காந்தி கொலை கைதி நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலை கைதி நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை கைதி நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
Published on

காட்பாடி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி பரோல் வழங்கப்பட்டது. பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார். மேலும் அவர் தங்கியுள்ள வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நளினியின் பரோல் கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் நளினிக்கு 2-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com