நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நேற்று ஒரேநாளில் 10 காசுகள் சரிவடைந்து, 360 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 360 காசுகளாக சரிவடைந்து உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:-

சென்னை-385, ஐதராபாத்-330, விஜயவாடா, தனுகு-320, பார்வாலா-300, மும்பை-370, மைசூரு-380, பெங்களூரு-365, கொல்கத்தா-372, டெல்லி-320.

கறிக்கோழி கிலோ ரூ.56-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.53-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

வசந்த நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலங்களில் முட்டை விலை குறைந்து இருப்பதன் காரணமாகவும், பிற மண்டலங்களில் முட்டை விற்பனை குறைந்து இருப்பதாலும், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com