

கொரோனா பொதுமக்களை மிரட்டுவதுடன், தியேட்டர்களையும் விட்டு வைக்கவில்லை. கொரோனாவுக்கு பயந்து தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஓடிடி தளங்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.இந்த வரிசையில், நடிகை நமீதாவும் ஒரு ஓடிடி தளத்தை தொடங்கி இருக்கிறார். அதற்கு, நமீதா தியேட்டர்ஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் படங்களை எங்கள் தளம் திரையிடும் என்று நமீதா கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில்...
என்னை பிரபலமாக்கிய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசித்தபோதுதான் ஓடிடி தளம் தொடங்கலாம் என்ற யோசனை வந்தது. இளம் திறமையாளர்களை என் ஓடிடி தளம் பயன்படுத்திக் கொள்ளும். பல புதிய நடிகர்கள், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள் என்றார்.