தேசிய நெல் திருவிழா

புதுச்சேரியில் நாளை தேசிய நெல் திருவிழா நடக்கிறது. இதில் கவர்னர் , முதல்-அமைச்சர் கலந்து கொள்கின்றனர்.
தேசிய நெல் திருவிழா
Published on

புதுச்சேரி

புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர் சங்கம் மற்றும் புதுச்சேரி முன்னோடி இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில்

'தேசிய நெல் திருவிழா-2022' என்ற பெயரில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் கரியமாணிக்கம் தனியார் பள்ளியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து இயற்கை தரச்சான்றிதழ்களை விவசாயிகளுக்கு வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள், இயற்கை இடு பொருட்கள், காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை நம்மாழ்வார் இயற்கை உழவர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் ராஜ வேணுகோபால் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com