மாசு இல்லாத சமுதாயம் படைப்போம்

இயற்கையை பாதிக்கும் மாசுக்களை அகற்றவும், கட்டுப்படுத்தவும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தனி மனித ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் ஆகாது. எனவே சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்க வேண்டியது நமது கடமையாகும்.
மாசு இல்லாத சமுதாயம் படைப்போம்
Published on

வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைக் கழிவுகள், மின்சாதனங்கள் வெளியேற்றும் வாயுக்கள் என மனிதன் ஏற்படுத்தும் மாசுக்களால் நீர், நிலம், காற்று, ஆகாயம் போன்றவை தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. இதன் மூலம் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் பாதிக்கப்படுகின்றன. பல நீர்நிலைகள், உயிர்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாதவையாக மாறி வருகின்றன.

உலகம் முழுவதும் பல நகரங்களில் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசு பட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளை முறையாக வெளியேற்றாமல் மண்ணில் கலப்பதால், பெரும்பாலான விளை நிலங்கள், தாவரங்கள் வளர்வதற்கு தகுதியற்றதாக மாறியுள்ளன.

1984-ம் ஆண்டு போபால் நகரத்தில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் பலர் உயிர் இழந்தனர். இன்றளவும் அந்த நகரத்தில் பிறக்கும் குழந்தைகளிடம் விஷ வாயுவின் தாக்கம் இருந்து வருகிறது. இதை நினைவுபடுத்தும் விதமாகவே இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 2-ந் தேதி தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகளின் மூலம் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளை தடுப்பது, இயற்கையை மாசுபடுத்தும் செயல்களுக்கு எதிரான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது போன்றவை இதன் நோக்கமாகும்.

இயற்கையை பாதிக்கும் மாசுக்களை அகற்றவும், கட்டுப்படுத்தவும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தனி மனித ஒத்துழைப்பு

இல்லாமல் இது சாத்தியம் ஆகாது. எனவே சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்க வேண்டியது நமது கடமையாகும்.

வாகனங்களை அதிக புகை வெளியேறாமல் அவ்வப்போது பரிசோதித்து பராமரிப்பது, தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளிப்படுத்தும் ஏ.சி போன்ற சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது, கழிவுகளை எரிக்காமல் இருப்பது, குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்றுவது போன்ற சிறு சிறு செயல்களின் மூலம் நம்மால் முடிந்த அளவு மாசுக்களை கட்டுப்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com