ஆலங்குளம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

ஆலங்குளம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
Published on

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் முருகன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கிரேசி (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கிரேசி கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று அதிகாலை வீட்டை விட்டு அவர் வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. உடனே உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கிரேசி பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிரேசி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com