அரக்கோணம் அருகே, ரெயிலில் அடிபட்டு வடமாநில வாலிபர் சாவு

அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.
அரக்கோணம் அருகே, ரெயிலில் அடிபட்டு வடமாநில வாலிபர் சாவு
Published on

அரக்கோணம்,

காட்பாடியில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயில் மார்க்கத்தில் மேல்பாக்கம் அருகே ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் ஜார்க்கண்ட் பகுதியை சேர்ந்த ராகேஷ்வர்மா (வயது 34) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com