புவனகிரி அருகே, பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது - ரூ.20 ஆயிரம் பறிமுதல்

புவனகிரி அருகே, பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீசார் கைது செய்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
புவனகிரி அருகே, பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது - ரூ.20 ஆயிரம் பறிமுதல்
Published on

புவனகிரி,

புவனகிரி அருகே குறியாமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு குறியாமங்கலத்தில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அம்மாபொண்ணு என்பவரது கூரை வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கீழமணக்குடியை சேர்ந்த காசிநாதன் (வயது 39), கணேசன்(38), கணபதி(41), மேலமூங்கிலடியை சேர்ந்த சக்திவேல்(40), அய்யப்பன்(43), ஆயிபுரத்தை சேர்ந்த செல்வம்(60) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 20 ஆயிரத்து 100 ரூபாய் மற்றும் புள்ளித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com