கள்ளக்குறிச்சி அருகே, கல்லூரி மாணவி, தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே, கல்லூரி மாணவி, தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
Published on

கள்ளக்கறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் மகள் வித்யா (வயது 18). இவர் சேலத்தில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். வித்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அய்யப்பன், அவரது மனைவி அம்சவள்ளியுடன் அருகில் உள்ள வயலுக்கு கரும்பு வெட்ட சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த வித்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் வலியால் அலறித்துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வித்யா நேற்று காலை உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தாய் அம்சவள்ளி வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வித்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com