காஞ்சீபுரம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் சாவு

காஞ்சீபுரம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சீபுரம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் சாவு
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் பொண்ணுவேல். இவரது மனைவி ராணி (வயது 39). இவர் காரை அருகே உள்ள தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ராணியுடன் அவரது தாய் தெய்வானை ( 58), உறவினர்கள் முருகம்மாள், துளசியம்மாள் ஆகியோர் இருந்தனர்.

அப்போது பெய்த பலத்த மழையில் மின்னல்தாக்கி ராணி உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். முருகம்மாள், துளசியம்மாள் படுகாயம் அடைந்தனர். தெய்வானை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காஞ்சீபுரம் அடுத்த போந்தவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (60) போந்தவாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள அவரது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி கருணாகரன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவங்கள் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com