கிருஷ்ணகிரி அருகே, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த காதலனும் சாவு

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த காதலனும் இறந்தார்.
கிருஷ்ணகிரி அருகே, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த காதலனும் சாவு
Published on

குருபரப்பள்ளி,

கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த கோப்புலு கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. இவரது மனைவி பிந்து (வயது20). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிந்துவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூனன்(28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து அறிந்த பிந்துவின் குடும்பத்தினர், அவரை கண்டித்துள்ளனர். இதனால் கள்ளக்காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறியது. திருவண்ணாமலை செல்வதற்காக பஸ்சில் வந்த இவர்கள் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரிமேடு என்ற இடத்தில் பஸ் நின்ற போது, பஸ்சில் இருந்து இறங்கி தாங்கள் வாங்கி வைத்திருந்த விஷம் குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதை பார்த்த மற்ற பயணிகள் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிந்து பரிதாபமாக இறந்தார். சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மல்லிகார்ஜூனன் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவரும் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com