நத்தம் அருகே, காதல் ஜோடி தற்கொலை

நத்தம் அருகே காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நத்தம் அருகே, காதல் ஜோடி தற்கொலை
Published on

நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியை சேர்ந்தவர் தெய்வம் (வயது 26). இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் வனிதா (22). இவருக்கு திருமணமாகவில்லை. ஒரே பகுதி என்பதால் தெய்வத்துக்கும், வனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. ஆனால் இவர்கள் இருவரும் அண்ணன், தங்கை உறவு முறை என்று கூறப்படுகிறது. எனவே உறவினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் காதலை கைவிட முடியாமல் தவித்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் ஊரின் அருகில் உள்ள ஒரு மாந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திவான் மைதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறை தவறிய காதலால், தூக்குப்போட்டு காதல்ஜோடி தற்கொலை செய்த சம்பவம் நத்தம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com