ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.
ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
Published on

படப்பை,

திருவண்ணாமலை மாவட்டம் வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி அனுசுயா (வயது 50). இவர் தன்னுடைய மகன் சரண்ராஜ் (30) என்பவருடன் சென்னை பம்மலில் இருந்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஒரகடம் அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் அனுசுயா படுகாயம் அடைந்தார். அவருடைய மகன் லேசான காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுசுயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com