சேத்தியாத்தோப்பு அருகே ஆம்னி வேன் மோதி பெண் பலி

சேத்தியாத்தோப்பு அருகே ஆம்னி வேன் மோதி பெண் பலி
சேத்தியாத்தோப்பு அருகே ஆம்னி வேன் மோதி பெண் பலி
Published on

சேத்தியாத்தோப்பு

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எரும்பூர் ஊராட்சி காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜாமணி மனைவி ராணி(வயது 58). இவர் நேற்று காலை சிதம்பரம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆனைவாரி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ஆம்னி வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com