மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: ஓட்டல் உரிமையாளர் மனைவி உள்பட 2 பேர் பலி

மணப்பாறை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஓட்டல் உரிமையாளர் மனைவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.
மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: ஓட்டல் உரிமையாளர் மனைவி உள்பட 2 பேர் பலி
Published on

மணப்பாறை,

தேனி என்.ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் இரணியன்(வயது 67). இவர் தேனியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சரோஜா (61). கணவன்-மனைவி இருவரும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் அங்கிருந்து சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை, நாகராஜ் (67) என்பவர் ஓட்டினார்.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் மையத்தடுப்பில் கார் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி சரோஜாவும், நாகராஜும் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகாயமடைந்த இரணியன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com