திருவள்ளூர் அருகே போலி டாக்டர் கைது

திருவள்ளூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே போலி டாக்டர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலி டாக்டர்கள் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் குழுவினர் பேரம்பாக்கம் மற்றும் இருளஞ்சேரி பகுதிகளில் உள்ள தனியார் கிளினிக்குகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த குழுவினர் இருளஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு அரக்கோணம் அடுத்த ரத்னசாந்தி நகரை சேர்ந்த சாரதி (வயது 61) என்பவர் பி.யு.சி. படித்துவிட்டு பல் மருத்துவம் செய்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com