திசையன்விளை அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி மாணவன் சாவு

திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
திசையன்விளை அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி மாணவன் சாவு
Published on

திசையன்விளை,

திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்தவர் கந்தராஜ். அவருடைய மகன் ராகுல் (வயது 14). இவன் திசையன்விளையில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். அப்புவிளையில் ராகுல் சித்தப்பா அரவிந்த் புதிய வீடு கட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை கட்டுமான சுவர் மீது ராகுல் தண்ணீர் ஊற்றி விட்டு, மின்மோட்டார் சுவிட்சை அணைக்காமல் மின்ஒயரை சுருட்டியதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கி சாவு

இதில் மின்சாரம் தாக்கி ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக திசையன்விளை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com