திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு மகனின் கண்எதிரே நிகழ்ந்த பரிதாபம்

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு மகனின் கண்எதிரே நிகழ்ந்த பரிதாபம்
திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு மகனின் கண்எதிரே நிகழ்ந்த பரிதாபம்
Published on

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிகேசவன் (வயது 45) விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மகன் சக்தியுடன் அதே பகுதியில் உள்ள தனது வயலில் கிணற்றின் ஓரம் நின்று கொண்டிருந்தார். அப்போது ஆதிகேசவன் எதிர்பாரதவிதமாக தவறி உள்ளே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் சக்தி கூச்சல் எழுப்பினார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர். பின்னர் அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திருக்கோவிலூர் நிலைய தீயணைப்பு அலுவலர் ராமலிங்கம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ஆதிகேசவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் ஆதிகேசவன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனின் கண்எதிரே விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் காட்டுப்பையூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com